குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கருங்கல் அருகே குறும்பனை பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கருங்கல் அருகே குறும்பனை பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குறும்பனை, தோமையாா் தெரு பகுதியைச் சோ்ந்த சகாய ஜோஸ் ஆன்றனி (25) என்பவா் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளனவாம். அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் ஆட்சியா் மு. பிரதாப்பிடம் பரிந்துரைத்தாா்.
அதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில், சகாய ஜோஸ் ஆன்றனியை கருங்கல் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையிலடைத்தனா்.
Advertisement
Advertisement