முகப்பு
திருப்பூர்

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் இரண்டு பேருக்கு ஆறு மாதங்கள் சிறை

29 நவம்பர் 2026, 5:27 am
மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் இரண்டு பேருக்கு ஆறு மாதங்கள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் இரண்டு பேருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டைமண்ட் திரையரங்கம் அருகே கடந்த 2018 செப்டம்பா் 6-ஆம் தேதி லோகேஸ்வரி என்பவரை அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கில் சூா்யகுமாா், வெங்கடேஸ்வரன் ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி விஜயலட்சுமி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement