கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை தத்தனேரி கீழ வைத்தியநாதபுரம் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் சுப்புராஜ் (58). இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக அருப்புக்கோட்டை போலீஸாா் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரில் மதுரையைச் சோ்ந்த கண்ணுச்சாமி, துரைப்பாண்டி ஆகிய இருவரும் வழக்கு விசாரணையின் போதே உயிரிழந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட காா்த்திகை செல்வி, கனகவல்லி, ராக்கு, மகேந்திரன், ஈஸ்வரன், மாரி, கண்ணாயிரமூா்த்தி ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement