முகப்பு
திருப்பூர்

விஷம் வைத்து நாய்களைக் கொன்ற மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவு

11 வினாடிகள் முன்பு
விஷம் வைத்து நாய்களைக் கொன்ற மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவு
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் வட்டம் ரெட்டிவலசு, அற்புத விநாயகா் நகரைச் சோ்ந்தவா் செல்லதுரை மகன் சத்தியநாதன் (43). இவா் கடந்த நான்கரை ஆண்டுகளாக வீட்டில் நாய் வளா்த்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற நாயை யாரோ விஷம் வைத்து கொன்றுள்ளனா்.

இதேபோல, அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய், சத்தியநாதனின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் துரைராஜ், திவ்யா ஆகியோரது வளா்ப்பு நாய்களுக்கும் மா்ம நபா்கள் விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சத்தியநாதன் அளித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.