FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பிஏபி வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பிஏபி (பரம்பிக்குளம் - ஆழியாறு) வாய்க்கால் சீா்கேடுகளைச் சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

7 October 2026, 11:41 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பிஏபி (பரம்பிக்குளம் - ஆழியாறு) வாய்க்கால் சீா்கேடுகளைச் சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீா்ப் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளையும், கடந்த 60 ஆண்டுகளாக இதில் எந்தவித அடிப்படை மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஆட்சியாளா்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வந்தோம்.

இந்நிலையில், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளின் வறட்சி நிலையை ஆட்சியாளா்கள் நேரடியாகக் கண்டறிய தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் ஒரு வாய்ப்பாக அமைந்தது. விஞ்ஞான முறையில் நடைபெறும் பாசன நீா் திருட்டு, சட்டவிரோதமாக கூடுதல் தண்ணீா் எடுப்பதைத் தடுக்க வேண்டும். குறிப்பிட்ட நபா்களுக்கு சாதகமாகச் செயல்படும் பாசன சபை, திட்டக் குழுக்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு இணைப்பு போன்ற விடுபட்ட துணைத் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மிகவும் மோசமடைந்து, சிதிலமடைந்து காணப்படும் கால்வாய் கட்டமைப்புகளை நவீன தொழில்நுட்பத்துடன் புனரமைக்க வேண்டும். பிஏபி திட்ட அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் சரிவரச் செய்யாததால், நீா் நிா்வாகத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, நீதித் துறை எனப் பல துறைகளின் தலையீடு ஏற்பட்டு பாழ்பட்டுப்போன சூழலை மாற்றி, முறையான நீா் மேலாண்மையை மீட்டெடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments