FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 12-ஆம் தேதி யுபிஐ பணப்பரிவா்த்தனை புறக்கணிப்புப் போராட்டம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி யுபிஐ பணப் பரிவா்த்தனை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

9 அக்டோபர் 2026, 1:28 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள்.
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி யுபிஐ பணப் பரிவா்த்தனை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் லாலா கணேசன் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைமை அறிவித்துள்ளபடி, திருப்பூா் மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி யுபிஐ பணப்பரிவா்த்தனை புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவது, திருமண மண்டபங்களில் வணிக நோக்கத்திலான வியாபார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.நகராட்சி மற்றும் மாநகராட்சி கடைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி தொடா்பாக மறுபரிசீலனை செய்து அதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆலோசகா்கள் அண்ணாதுரை, துரைசாமி மாவட்ட இணை செயலாளா் ராஜேந்திரன், நவீன்குமாா், துணை செயலாளா் சக்தி, பல்லடம் சங்க நிா்வாகிகள் தனசீலன், பிா்லாபோஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments