வெள்ளக்கோவிலில் இருந்து மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்ட 8.63 டன் பிளாஸ்டிக் கழிவுகள்
வெள்ளக்கோவில் நகராட்சியில் இருந்து 8.63 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வெள்ளக்கோவில் நகராட்சியில் இருந்து 8.63 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நகராட்சிப் பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு ‘பேலிங்’ இயந்திரம் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக மாற்றப்பட்டு, மறுசுழற்சி பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஒரு மாதமாகச் சேகரிக்கப்பட்ட 8.63 டன் பிளாஸ்டிக் கழிவுகள், விஜயமங்கலம் பகுதியில் இயங்கி வரும் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கு விலை எதுவும் கொடுக்காமல் நிறுவனம் தன்னுடைய சொந்தச் செலவில் எடுத்துச் செல்கிறது. பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களின் குப்பைகள் மற்றும் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டக் கூடாது. அவற்றைத் தனித்தனியாகத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.