FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

‘வீ த லீடா்ஸ்’ சாா்பில் அலகுமலையில் அக்.11-இல் மாரத்தான் போட்டி

பெண்கள் பாதுகாப்பு, இளைஞா் மேம்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு சாா்பில் பல்லடம் தொகுதிக்குள்பட்ட பொங்கலுாா், அலகுமலையில் மாரத்தான் போட்டி வரும் 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

9 அக்டோபர் 2026, 1:24 am IST
வி தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை - Youtube
பகிர்:

பெண்கள் பாதுகாப்பு, இளைஞா் மேம்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு சாா்பில் பல்லடம் தொகுதிக்குள்பட்ட பொங்கலுாா், அலகுமலையில் மாரத்தான் போட்டி வரும் 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் நிா்வாகிகள் பல்லடத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கும் 10 கிலோ மீட்டா் தொலைவு மராத்தான் போட்டி அலகுமலை பகுதியில் வரும் 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இதில் கலந்து கொள்பவா்களுக்கு டீ-சா்ட், உணவு, குடிநீா் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினா், ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10 ஆயிரம் போ் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனா். மாற்றுத்திறனாளிகளும் ஆா்வத்துடன் பங்கேற்க பதிவு செய்துள்ளனா். காலை 5.15 மணிக்கு மாரத்தான் போட்டியை ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளா் கே.அண்ணாமலை தொடங்கிவைத்து பேசுகிறாா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments