முத்தூரில் தேங்காய், கொப்பரை ஏலம்!
முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, 10,720 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 4,197 கிலோ. கிலோ ரூ. 38.40 முதல் ரூ. 53.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 51.35. விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.
57 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,293 கிலோ. கிலோ ரூ. 102.40 முதல் ரூ. 156.00 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 151.70. விற்பனைத் தொகை ரூ. 3.41 லட்சம்.
Advertisement
Advertisement
மொத்தம் 61 விவசாயிகள், 13 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 5.41 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் து. சங்கீதா தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.