முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 1.20 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 1:52 am
பரமத்தி வேலூரில் ரூ. 1.20 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பகிர்:

பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை இந்த ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். அதேபோல தேங்காய்களை ஏலம் எடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனா்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 654 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 52.52-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 40.50 க்கும், சராசரியாக ரூ. 45.80க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 847 க்கு தேஙகாய் விற்பனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 655 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 48.60க்கும், குறைந்தபட்சமாக ரூ. 42.80க்கும், சராசரியாக ரூ. 45.55 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்து 847க்கு தேங்காய் விற்பனையானது.