FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருமாங்கல்யத் தேங்காயை ரூ. 2.55 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த பெண்!

மாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றைத் தேங்காய் இரண்டு லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

36 வினாடிகள் முன்பு
போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினா். (உள்படம்) அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.
பகிர்:

போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமாங்கல்யத் தேங்காயை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு, பெண் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ. 10) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பக்தர்கள் விரதமிருந்து தினமும் சுவாமியை வழிபட்டனர். ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையடுத்து, திங்கள்கிழமை வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என பக்தர்கள் பங்கேற்று கல்யாண வைபவங்களைச் செய்தனர். பின்னர் வள்ளி, தெய்வானை சிலைகளுக்கு சுப்பிரமணியசுவாமி மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, மொய் எழுதும் நிகழ்ச்சியும், மதிய விருந்தும் நடைபெற்றது. திருக்கல்யாண ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் சோமாஸ்கந்த குருக்கள், விக்னேஷ், நன்கொடையாளர்கள் செய்தனர்.

இந்தக் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தில் மாங்கல்யம் வைக்கப்படும் தேங்காய் ஏலம் விடப்படுவது ஐதீகம். இந்த ஆண்டு திருக்கல்யாணத்தில் மாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றைத் தேங்காய் இரண்டு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

திருக்கல்யாண வைபோகத்தில் மாங்கல்யம் சுற்றப்பட்ட தேங்காயை, விழாவில் பங்கேற்ற பெண் ஒருவர் ரூ. 2,55,000-க்கு ஏலத்தில் எடுத்தார்.

கடந்த உத்திரத் திருவிழாவின்போது திருக்கல்யாண தேங்காய் மூன்று லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

summary

At the Bodi Subramania Swamy Temple, a woman won the auction for the 'thirumangalya thengai' (a coconut used in the sacred wedding-necklace ritual) for 2.5 lakh rupees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.