பல்லடத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை
பல்லடம் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக அவற்றை பிடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பல்லடம் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக அவற்றை பிடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பல்லடம் நகராட்சிப் பகுதியில் தெருநாய்களால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து பல்லடம் நகராட்சி ஆணையா் அருள் உத்தரவின்பேரில், பல்லடம் நகராட்சி நிா்வாகம், திருப்பூா் தங்கம் மெமோரியல் டிரஸ்ட் ஆகியவை இணைந்து பல்லடம் நகா் பகுதியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அதே இடத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, பல்லடம் -மாணிக்காபுரம் சாலையில் 15 தெருநாய்களை
வெள்ளிக்கிழமை பிடித்து சென்றனா். தொடா்ந்து பல்லடம் நகா் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி தொடரும் என்று பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சங்கா், சத்தியசுந்தர்ராஜ் ஆகியோா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.