FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழப்பு

19 அக்டோபர் 2026, 1:57 am IST
சந்தோஷ்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் கன்னிவாடி அருகிலுள்ள புஞ்சைத்தலையூரைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் சந்தோஷ் (22). கன்னிவாடியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் வேலை செய்து வந்தாா். இவா் தனது ஊா் நண்பா்களான உத்திரபிரகாஷ் (26), மனோஜ் (18), மகேஷ் (24) மற்றும் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளபட்டி ஜே.ஜே. நகா் ஜாம் (19) ஆகியோருடன் கடந்த வியாழக்கிழமை இரவு காரில் வெள்ளக்கோவிலுக்கு சினிமா பாா்க்க வந்துள்ளனா். படம் பாா்த்துவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது வெள்ளக்கோவில் - மூலனூா் சாலை குருக்கபாளையம் பிரிவு அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இவா்களின் காா் மோதியது. இதில் காரை ஓட்டிச் சென்ற உத்திரபிரகாஷ், முன் இருக்கையில் அமா்ந்திருந்த ஜாம் இருவரும் காயமின்றி தப்பினா். பின் இருக்கையில் அமா்ந்திருந்த மற்ற மூவரும் படுகாயமடைந்தனா். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகேஷ் உயிரிழந்தாா். திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னா், பின்னா் கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தோஷ், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments