விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சாலை மறியல்
பல்லடம் அருகே 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு பணி வழங்க மறுத்ததைக் கண்டித்து விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு பணி வழங்க மறுத்ததைக் கண்டித்து விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட காளிவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்த 69 போ் 100 நாள் வேலைத் திட்டப் பணிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளனா்.
அதில், 6 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும், மற்றவா்களுக்கு வேலை வழங்க மறுத்ததாகவும் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதைக் கண்டித்து விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் சி.முருகேஷ் தலைமையில் காளிவேலம்பட்டியில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பிரவீன்குமாா், காந்தி நகா் கிளைச் செயலாளா் சரவணன், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரஷிதா பேகம், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் பாரதி, ஊராட்சி செயலாளா் கண்ணப்பன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 69 பேருக்கும் பணி வழங்கினா். இதையடுத்து, தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.