புதுகையில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விவசாயத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை, பட்டா, வீடு வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை, பட்டா, வீடு வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ. ரெங்கராஜ் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் தொடங்கி வைத்தும், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாரிமுத்து நிறைவு செய்து வைத்தும் பேசினா்.
Advertisement
Advertisement
விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி. பத்மாவதி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் உ. அரசப்பன், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏனாதி ஏ.எல். ராசு, மாவட்டத் துணைத் தலைவா் க. சுந்தர்ராசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: வீட்டுமனை இல்லாத விவசாயத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு இல்லாத விவசாயத் தொழிலாளா்களுக்கு இலவச வீடுகளையும் அரசே வழங்க வேண்டும்.
கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைக் குலைக்காமல் மாநில அரசு அறிவித்தபடி 150 நாள்கள் வேலை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கென மாநில அரசு, தனித் துறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.