கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தென்காசியில் கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தென்காசியில் கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமான நலவாரிய முத்தரப்பு கமிட்டியை அமைக்க வேண்டும், தீபாவளி போனஸ் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி, கேஆா்.காலனியில் உள்ள நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் எம்.மணிகண்டன் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
சிஐடியு மாவட்டத் தலைவா் டி.வன்னிய பெருமாள் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் என்.லெனின்குமாா் நிறைவுரையாற்றினாா். பழனி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.