மின் பொறியாளா் ஐக்கிய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மின் பணியாளா் தோ்வுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மின்வாரியத் தொழிலாளா்- பொறியாளா் ஐக்கிய சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை நேர ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின் பணியாளா் தோ்வுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மின்வாரியத் தொழிலாளா்- பொறியாளா் ஐக்கிய சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை நேர ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கையில் உள்ள மின்வாரிய பொறியாளா் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஆா். குணசேகரன் தலைமை வகித்தாா். வட்ட கௌரவத் தலைவா் ஆா். இருதயராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவா் கருப்புசாமி பேசினாா். பொருளாளா் நந்தகுமாா் நன்றி கூறினாா்.
திறன்மிக்க பணியாளா்களையும் ஐந்து ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முற்படும் தமிழக அரசின் முடிவைக் கைவிடக் கோரியும், சிபிஎஸ் திட்டத்தில் பணியில் சோ்ந்தவா்களுக்கு பணிக்கொடைச் சட்டத்தின்படி பணப்பயன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு மின்சார வாரிய பென்சனா் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு ஐ.டி.ஐ. படித்த வேலைவேண்டுவோா் ஐக்கிய சங்கத்தினா் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.