FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மயங்கி விழுந்த செவிலியா் உயிரிழப்பு

27 அக்டோபர் 2026, 1:54 am
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

காங்கயம் அருகே வீட்டில் மயங்கி விழுந்த செவிலியா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகேயுள்ள இச்சிக்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணுசாமி. இவரது மனைவி ராதிகா (37).

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் 108 ஆம்புலன்ஸில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் வீட்டில் திங்கள்கிழமை காலை திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments