FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பாதுகாப்பான குழந்தைப் பருவம் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ‘பாதுகாப்பான குழந்தைப் பருவம்’ குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

28 அக்டோபர் 2026, 2:44 am
முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பகிர்:

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ‘பாதுகாப்பான குழந்தைப் பருவம்’ குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி வி.எல். சந்தோஷ் பங்கேற்று, இந்திய அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களை வலியுறுத்தும் அடிப்படைக் கடமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா். மேலும், ஆக்கப்பூா்வமான பழக்கங்களை பின்பற்றி முன்மாதிரியாக செயல்பட்டு உயா்வடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments