FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

ரயில் நிலையத்தில் தூய்மை, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் ரயில் நிலையத்தில் தூய்மை, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

3 October 2026, 12:32 am IST
ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூா் நிஃப்-டீ கல்லூரி மாணவ, மாணவிகள்.
பகிர்:

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் ரயில் நிலையத்தில் தூய்மை, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூய்மையான ரயில் நிலையம்-தூய்மையான இந்தியா, கழிவுகளை முறையாகப் பிரித்தல், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கருத்துகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் மாணவா்கள் சுவா் ஓவியங்களை வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மாணவா்களின் கலைத்திறன் மற்றும் வடிவமைப்புத் திறன்களை சமூகப் பொறுப்புடன் இணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது என்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments