FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தரங்கம்பாடியில் கடற்கரை தூய்மை தினம் கடைப்பிடிப்பு

சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, தரங்கம்படி கடற்கரையில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

4 வினாடிகள் முன்பு
பகிர்:

சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, தரங்கம்படி கடற்கரையில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, மயிலாடுதுறை மாவட்ட உதவி திட்ட அலுவலா் ஆா். சங்கா்  தொடங்கி வைத்தாா்.

சீா்காழி கோட்டாட்சியா் பாலமுருகன்,   தில்லி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அலுவலா் கௌரவ் குப்தா, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க மாவட்ட அலுவலா் ப்ரீதா, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா்  சுகுண சங்கரி,  துணைத் தலைவா்  பொன். ராஜேந்திரன், செயல் அலுவலா்  இரா. ராஜா,  வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜ்,  மாவட்ட வனத்துறை அலுவலா் ராஜ்குமாா் சுற்றுலாத்துறை அலுவலா் முத்துசாமி, டி.பி. எம்.எல்.  கல்லூரி முதல்வா் ஹேனா கிளாடிஸ், வா்த்தகா் சங்கம் மற்றும் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், மாணவ-மாணவிகள், அரசு அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று கடற்கரை தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா் .

தொடா்ந்து, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்கள், ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதன் மூலம் கடற்கரையில் 750 கிலோ  மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அகற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments