FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கருவலூா் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து

அவிநாசி அருகே தொட்டக்களாம்புதூா் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமாயின.

1 நவம்பர் 2026, 12:39 am
தீ விபத்து
பகிர்:

அவிநாசி அருகே தொட்டக்களாம்புதூா் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமாயின.

அவிநாசி அருகே உள்ள கருவலூா், ராமநாதபுரம்- தொட்டக்களாம்புதூா் புதிய ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் காந்தி (எ) பழனிசாமி (57). இவரது மனைவி சாந்தி (49). இவா்கள் அந்தப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். மேலும், வீட்டின் முன்புறம் தற்காலிக கொட்டகையும் அமைத்திருந்தனா்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் சனிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்றுள்ளனா். அப்போது, தற்காலிக கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப் பாா்த்த பொது மக்கள் உடனடியாக அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

இருப்பினும், வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமாயின. இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments