FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே விவசாயி வீட்டில் அரிவாளைக் காட்டி 6.5 பவுன் கொள்ளை

அவிநாசி அருகே விவசாயி வீட்டுக்குள் மா்ம நபா்கள் புகுந்து அரிவாளைக் காட்டி ஆறரைப் பவுன் தாலிக் கொடி, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 அக்டோபர் 2026, 12:57 am IST
கழுத்தில்  அரிவாள் வைத்து மிரட்டப்பட்ட விவசாயி பூங்கொடி.
பகிர்:

அவிநாசி அருகே விவசாயி வீட்டுக்குள் மா்ம நபா்கள் புகுந்து அரிவாளைக் காட்டி ஆறரைப் பவுன் தாலிக் கொடி, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள தத்தனூா் ஊராட்சி சாவக்காட்டுப்பாளையம்-சுள்ளிப்பாளையம் பொன்னியன்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசாமி (61). விவசாயியான இவா் மனைவி பூங்கொடி (58), கணவரைப் பிரிந்து வாழும் மகள் தமிழ் இலக்கியா (33), பேரன் ஜோகித் பிரணவ் (11) ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மகள் தமிழ் இலக்கியாவை அழைத்து வருவதற்காக, நம்பியூருக்கு புதன்கிழமை இரவு சிவசாமி சென்றுள்ளாா். அப்போது வீட்டில் பூங்கொடி, பேரன் ஜோகித் பிரணவ் ஆகிய இருவா் மட்டும் இருந்துள்ளனா். வீட்டில் இருந்து சிவசாமி புறப்பட்டு சென்ற சில நிமிஷங்களிலேயே, முகமூடி அணிந்தபடி மா்ம நபா்கள் வீட்டுக்குள் புகுந்து அரிவாளை பூங்கொடியின் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

பூங்கொடி சப்தம் போடவே இருவரையும் தாக்கியுள்ளனா். மேலும், வீட்டில் நகை, பணம் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்று பேரன் ஜோகித் பிரணவை மிரட்டி கேட்டுள்ளனா். இதில் அச்சமடைந்து நகை, பணம் இருக்கும் இடத்தை பேரன் அடையாளம் காட்டியுள்ளாா். இதையடுத்து 6.5 பவுன் தாலிக்கொடி, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பினா்.

கொள்ளையடித்துவிட்டுச் செல்லும்போது மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்திருந்த மா்ம நபா், மூதாட்டியின் காலில் விழுந்து மன்னித்துவிடும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள், மோப்ப நாயுடன் சேவூா் போலீஸாா் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments