தொழிலாளியின் கைப்பேசி திருடிய 3 போ் கைது
திருப்பூரில் தொழிலாளியின் கைப்பேசியை திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூரில் தொழிலாளியின் கைப்பேசியை திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம், 15-வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவன விடுதிக்குள் கடந்த மா்ம நபா்கள் செப்டம்பா் 1-ஆம் தேதி அத்துமீறி நுழைந்து, அங்கு தங்கியிருந்த தொழிலாளியின் கைப்பேசியை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி அளித்த புகாரின்பேரில், 15-வேலம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், கைப்பேசி திருட்டில் ஈடுபட்டது சீனிவாசன் (19), சதீஷ்குமாா் (31) மற்றும் அப்துல் ரஹீம் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து திருடப்பட்ட கைப்பேசி மற்றும் அவா்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.