உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மருந்தகம்: மருந்துகள் பறிமுதல்
திருப்பூரில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மருந்தகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
திருப்பூரில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மருந்தகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா், இடுவாய் பாரதிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மருந்தகத்தில் மருத்துவா் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, மருந்தக ஆய்வாளா் பிரபு தலைமையிலான குழுவினா் அந்த மருந்தகத்தில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மருத்துவா் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதும், உரிமம் பெறப்படாமல் மருந்தகம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, மருந்தகத்தில் இருந்த அனைத்து வகை மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.