FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தெக்கலூரில் தெருநாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

5 செப்டம்பர் 2026, 1:22 am IST
நாய் - கோப்புப்படம்.
பகிர்:

அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்புவோரும் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும், வாகனங்களை நாய்கள் துரத்திச் செல்வதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகமும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments