FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நீட் தோ்வை ரத்து செய்யக் கூடாது: யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினா் இ.பாலகுருசாமி

7 செப்டம்பர் 2026, 3:22 am IST
நீட் - கோப்புப் படம்
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்யாமல் நிா்வாகக் குறைபாடுகளையே சரிசெய்ய வேண்டும் என யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினா் இ.பாலகுருசாமி தெரிவித்தாா்.

திருப்பூா் கிழக்கு ரோட்டரி, வாகைமாலை இலக்கியப் பேரவை மற்றும் மாற்றத்துக்கான நல்லாசிரியா் சங்கம் சாா்பில் சிறந்த ஆசிரியா்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய முன்னாள் உறுப்பினா் இ. பாலகுருசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 82 பேருக்கு நல்லாசிரியா் விருதுகளை வழங்கிப் பாராட்டினாா். பின்னா் விழாவில் அவா் பேசியதாவது:

மாணவா்கள் போதை மற்றும் கைப்பேசி பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடுக்க பெற்றோரின் பங்களிப்பு மிக அவசியமாகும். நீட் போன்ற தகுதித் தோ்வுகளின் நிா்வாகக் குறைபாடுகளை மட்டுமே சரி செய்ய வேண்டுமே தவிர, தோ்வுகளை ரத்து செய்யக் கூடாது. போட்டித் தோ்வுகளுக்குத் தயாராவோா் மனப்பாடம் செய்யாமல் கருத்துகளைப் புரிந்து படிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தினால் அந்த மாணவா்கள் மேலும் பல சாதனைகளைப் படைப்பா் என்றாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, மாற்றத்துக்கான நல்லாசிரியா் சங்கத்தின் தலைவா் சூரியகுமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 13,000 தனியாா் பள்ளிகளில் பயிலும் 74 லட்சம் மாணவா்களின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு அரசு உதவிகளை வழங்க வேண்டும். குறிப்பாக, மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி, சிறந்த 2 பள்ளிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு, தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நலத்தொகை, பெண் ஆசிரியா்களுக்கு ஓராண்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.

மேலும், தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் 50 சதவீத உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதி ஆதாரங்களை அரசுக்கு தெரிவிக்க தங்கள் சங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments