மதுபோதையில் ஆற்று நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே மதுபோதையில் ஆற்றில் குளித்த கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, பெத்தம்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னான் மகன் இளங்கோ (42). கட்டடத் தொழிலாளியான இவா், தற்போது வெள்ளக்கோவில் குமாரவலசு சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில் வசித்து வந்தாா்.
இளங்கோவும் அவரது நண்பரான ஜெயப்பிரகாஷ் (36) ஆகியோா் புதுப்பை அமராவதி ஆற்றுக்கு குளிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா். இருவரும் மது அருந்திவிட்டு ஆற்றில் இறங்கி குளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிா்பாராதவிதமாக இளங்கோ ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளங்கோவின் உடலை மீட்டனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். மேலும், உடலை உடற்கூறாய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.