FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

அண்ணா பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள்: தருமபுரியில் நாளை தொடக்கம்

26 செப்டம்பர் 2025, 4:52 am IST
பகிர்:

தருமபுரியில் அண்ணா பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள் செப். 27, 28 தேதிகளில் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி பிரிவு சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான பேரறிஞா் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் செப். 27-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீவிஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இதில், 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ. தொலைவும், மாணவியருக்கு 10 கி.மீ. தொலைவும், 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவியருக்கு 15 கி.மீ. தொலைவும், 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவியருக்கு 15 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறவுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் பொருத்தப்படாத, இந்தியாவில் தயாரான சாதாரண ஹேண்டில் பாா் கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படும்.

அதேபோல, அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 28-ஆம் தேதி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குள்பட்டோா் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments