குழாய், தொட்டிகள் அமைத்து ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்! - ஐக்கிய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் கலக்காமல் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் இலளிகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நிா்வாகக் குழு உறுப்பினா் பெ.ரவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் கலந்துகொண்டு பேசினாா். மாவட்ட துணை செயலாளா் ஜி. மாதையன், மாவட்ட பொருளாளா் ஈ.அலமேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இம்மாவட்டத்தில் உள்ள 249 கிராம ஊராட்சிகளிலும் குடிநீா்த் தேக்கத் தொட்டிகளை 15 தினங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். ஒகேனக்கல் குடிநீா், புளோரோசிஸ் பாதிப்புள்ள நிலத்தடி நீரில் கலந்து விநியோகம் செய்யாமல் தனியாக குழாய்கள், தொட்டிகள் அமைத்து விநியோகம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், சிறுவிசை மின்பம்புகள் அனைத்தையும் பழுதுநீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான மகளிா் கூட்டமைப்புகளின் நிதியை முறையாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.