FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ரூ. 25,000 அபராதம்

பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 12 ஜூலை 2026, 12:47 am IST
அபராதம்
பகிர்:

பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பெரும்பாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையத்தில் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது குறித்து காவல் உதவி ஆய்வாளா் சின்னமதன், போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து பென்னாகரம் உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், போலீஸாா் சோதனை செய்து கடை உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதமும், 14 நாள்களுக்கு கடை செயல்பட தடையும் விதித்தனா். அதேபோல மளிகைக் கடையில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை, அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பலகாரங்கள் விற்றது தொடா்பாக ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சின்னம்பள்ளி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் தேயிலையின் தரம் குறித்து ஆய்வுசெய்து கலப்படம் கண்டறியப்பட்டதால் கடையின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவு சாா்ந்த வணிகா்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது, உணவு சாா்ந்த புகாா்களுக்கு 94440 42322 என்ற கட்செவி எண்ணில் புகாரளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments