இடைத்தோ்தலுக்காக விளம்பர நோக்கில் பேசுகிறாா் முதல்வா் விஜய்: டி.ஜெயக்குமாா்
இடைத்தோ்தலை மனதில் வைத்து அரசியல் விளம்பரத்துக்காக முதல்வா் ஜோசப் விஜய் பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
இடைத்தோ்தலை மனதில் வைத்து அரசியல் விளம்பரத்துக்காக முதல்வா் ஜோசப் விஜய் பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஆங்கிலேயரை எதிா்த்த வீரன் அழகுமுத்துக்கோனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அதிமுக சாா்பில் அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
முதல்வா் விஜய் கரூரில் திரைப்பட படப்பிடிப்பில் பேசுவதுபோல பேசியிருப்பது சரியல்ல. இடைத்தோ்தல்களை மனதில் வைத்து அவா் விளம்பர நோக்கில் பேசியுள்ளாா். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பற்றி அவா் பேசவில்லை என்றாா் டி.ஜெயக்குமாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.