FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சங்கிலிவாடியில் மின்கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 14 ஜூன் 2026, 3:18 am IST
சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பம். குடியிருப்புப் பகுதி வழியாக செல்லும் மின்கம்பிகள்.
பகிர்:

அரூரை அடுத்த சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், செல்லம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட சங்கிலிவாடி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மாரியம்மன் கோயில் தெருவில், குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கம்பத்தின் மேல்பகுதி சேதமடைந்துள்ளது.

கம்பத்தின் சிமென்ட் கட்டுமானம் முழுவதும் உடைந்துள்ளது. கம்பத்தில் கம்பிகள் மட்டுமே உள்ளன. மழைக் காலங்களில் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் உடைந்து குடியிருப்புப் பகுதியில் விழும் நிலையுள்ளது. அதேபோல, குடியிருப்புப் பகுதி வழியாக செல்லும் மின்கம்பிகள் ஆபத்தான வகையில் உள்ளது.

Advertisement

Advertisement

மின்கம்பிகளை சீரமைக்கவும், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றவும் மின்வாரியத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments