FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சேலம் மத்திய சிறைக்கு வந்தது வெடிகுண்டு கண்டறியும் "அக்னி' மோப்ப நாய்

சேலம், அக். 8: சேலம் மத்திய சிறையில் வெடிகுண்டு, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதற்காக, அக்னி என்ற லேப்ரடார் இன நாயும், ஜான்சி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் வாங்கப்பட்டது.  3 மாத குட்டிகளாக

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

சேலம், அக். 8: சேலம் மத்திய சிறையில் வெடிகுண்டு, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதற்காக, அக்னி என்ற லேப்ரடார் இன நாயும், ஜான்சி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் வாங்கப்பட்டது.

 3 மாத குட்டிகளாக இருந்த 2 நாய்களுக்கும் கோவை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்ததால், அக்னி மோப்ப நாய் சேலம் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. மற்றொரு நாயான ஜான்சிக்கு, கல்லீரலில் கோளாறு இருப்பதால் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

 சிறப்புப் பூஜை: சேலம் கொண்டு வரப்பட்ட அக்னிக்கு, சேலம் அஸ்தம்பட்டி சிறையில் உள்ள முனியப்பன் கோயிலில் சிறை கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

 ரூ.2 லட்சத்தில் கட்டடம்: சேலம் சிறைக்குள் தங்க வைக்கப்படும் அக்னி, ஜான்சிக்காக ரூ.2 லட்சத்தில் புதிதாக தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை, தனித் தனியே கழிப்பிடம், குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்க 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 உணவு: 2 நாய்களுக்கும் உணவாக தினசரி தலா 350 கிராம் சோள மாவு உள்ளிட்ட தானியங்களால் தயாரிக்கப்பட்ட சத்துணவு, 2 முட்டைகள், மாமிசம் போன்றவை வழங்கப்படுகின்றன. இவற்றின் பராமரிப்புச் செலவுக்கு மாதம் ரூ.4,500 ஒதுக்கப்பட உள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments