FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரூர் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர்.அரூர் பெரிய ஏரி சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழைக் காலங்களில் இந்த ஏ

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அரூர் பெரிய ஏரி சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழைக் காலங்களில் இந்த ஏரி நிரம்பினால் அரூர், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் குடிநீர்த் தட்டப்பாடு ஏற்படாது. இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறுவதற்கான ராஜகால்வாய் பகுதியில் ஏராளமான தனியார் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் ஏரியில் இருந்து வரும் உபரிநீர், அரூர் நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லமுடியாத நிலையுள்ளது. இதனால் அரூர் நகரின் மையப் பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. கழிவு நீர் தேங்குவதால் அரூரில் கொசு உற்பத்தியும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2008-2009-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரிடம் கோரிக்கை மனுக்கள் அனுப்பட்டுள்ளன. ஆனால் பொதுப்பணித் துறையினர் இது வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, அரூர் பெரிய ஏரி முதல் வாணியாறு வரையிலும் உள்ள ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் மு.கா.முகமது அலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரூர் வட்டச் செயலர் பி.குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகள் கூறுகையில், அரூர் பெரிய ஏரி ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கால்வாய் எல்லைகளை அளவீடு செய்துதரக் கோரி வருவாய்த் துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை சார்பில் சர்வே செய்யும் பணிகள் இன்னும் செய்துதரப்படவில்லை. எனவே அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments