விலையில்லா இசைக்கருவிகள் பெற நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
விலையில்லா இசைக் கருவிகள் பெற, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.
விலையில்லா இசைக் கருவிகள் பெற, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின் கீழ், இயங்கும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவுபெற்றுள்ள கலைஞர்களுக்கு ரூ. 10,000 மதிப்பில் விலையில்லா தொழில் கருவிகள், ஆடை அணிகலன்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், 10 கலைஞர்களுக்கு, விலையில்லா இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, இந்த உதவி தேவைப்படுவோர், தங்களின் முழு விவரம், நலவாரிய அடையாள அட்டை நகல், வாரிய உறுப்பினர் பதிவினை தற்போது வரை புதுப்பித்த விவரம், உதவி தேவைக்கான காரணத்தின் விளக்கம் மற்றும் இசைக்கருவி, ஆடை, அணிகலன்கள் தேவைப்பட்டியல், அதற்கான தோராய விலை மதிப்பீடு ஆகியவற்றை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள், மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தளவாய்ப்பட்டி- திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி- அஞ்சல், சேலம் - 636 302 என்கிற முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0427 2386197 என்கிற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.