FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஆலயங்களைவிட கல்விச் சாலைகளே மேலானவை: ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி

ஆலயங்களைவிட கல்விச் சாலைகளே மேலானவை என்றார் ஓய்வுபெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:27 am IST
பகிர்:

ஆலயங்களைவிட கல்விச் சாலைகளே மேலானவை என்றார் ஓய்வுபெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி.
ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் 4-ஆம் ஆண்டு விழா ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி, "கண்ணீர் விட்டே வளர்த்தோம்' என்ற தலைப்பில் பேசியது:
நமது நாட்டிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்றால் மதம் சார்ந்திருக்க வேண்டும்.  ஆனால், கல்விச் சாலைகளுக்குச் செல்ல வேண்டும் எனில், மதம் தேவையில்லை.  மனிதனாக இருந்தால் மட்டுமே போதுமானது. எனவே,  ஆலயங்களைக் காட்டிலும் கல்விச் சாலைகளே மேலானவை. 
ஆயுதங்கள் போர்க்களத்தில் மட்டுமே வெற்றியைத் தரும். கல்வியறிவு மூலம் வகுக்கும் உத்திகளினால் எப்போதும், அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைக்கும். புத்தகங்களை நாம் தலை குனிந்து பயின்றால்,  இச்சமுதாயத்தில் நாம் தலைநிமிர்ந்து வாழலாம்.  செல்வந்தர்களின் குழந்தைகள் வளர்ந்தே பிறக்கின்றன. ஆனால், ஏழைக் குழந்தைகள் பிறந்து பின்புதான் வளர்கின்றன.  திருக்குறள், சங்க இலக்கியங்கள், நீதி நூல்களில் உள்ள கருத்துகள் வேறெந்த மொழி நூல்களிலும் காண முடியாது. தனி மனித முன்னேற்றமும்,  சமுதாய வளர்ச்சியும் கல்வி சார்ந்தே அமைகிறது.  எனவே, அத்தகைய கல்வியை இளம்பருவத்திலே உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல்,  ஒழுக்கத்துடன் கற்க வேண்டும்.  கற்ற கல்வியைப் பின்பற்றி நடக்க வேண்டும்.  மாணவர்கள் தங்களது நேரத்தை மைதானம் அல்லது நூலகம் இந்த இரண்டு இடங்களில் மட்டுமே செலவளிக்க வேண்டும்.  இவ்விரு இடங்கள் நமக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்கும்.  பெற்றோர்,  தங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். இதற்காக பெற்றோரும் நல்ல நூல்களைப் படிக்க  வேண்டும். 
இதேபோல, ஆசிரியர்களும் கற்றறிந்து மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.  அதிலும், அறம் சார்ந்த கல்வியைக் கற்பிக்க வேண்டும்.  பெற்றோரும், ஆசியர்களும் நமக்களிக்கும் கல்வியறிவை உள்வாங்கி,  அதைப் பயின்று,  வாழ்க்கையில் தங்களுக்கென இலக்கு நிர்ணயித்து,  அதை நோக்கிப் பயணித்தால் நிச்சயம் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறலாம் என்றார்.
விழாவில், ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளிதுணை முதல்வர் கு.சிவநேசன்,  முதுநிலை ஆசிரியர் க.கந்தசாமி, வழக்குரைஞர் இரா.த.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ஆ.சொக்கலிங்கம் வரவேற்றார்.
விழாவின் தொடக்க நிகழ்வில் பேராசிரியைகள் சி.கோமதி, இர.லிசி, ஆசிரியைகள் கோ.உஷாபாய், மே.ஜ.சாரம்மா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments