FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரூரில் தடகளப் போட்டிகள் தொடக்கம்

அரூரில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

அரூரில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தத் தடகளப் போட்டிகளை மகளிர் காவல் ஆய்வாளர் பி. லட்சுமி தொடக்கி வைத்தார். போட்டிகள் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் நடைபெறுகிறது. உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 820-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதில்,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜி.எஸ். ராஜேந்திரன், உடல் கல்வி ஆசிரியர்கள் அ.வேடியப்பன், எம். சிவக்குமார், பி.பழனிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments