FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

திமுகவினர் சாலை மறியல்: 416 பேர் கைது

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திமுகவினர் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 25 மே 2018, 2:42 am IST
பகிர்:

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திமுகவினர் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி நான்குமுனை சாலைச் சந்திப்பில் திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் அக் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 பெண்கள் உள்பட 53 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், காவல் துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல, பென்னாகரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்பட 191 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலர் இ.ஜி.சுகவனம், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் வெற்றிச் செல்வன், மாநில விவசாய அணி துணைச் செயலர் வெங்கடேசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் பரிதா நவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், மாவட்டத்தில் சூளகிரியில் முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர், பர்கூரில் 30 பேர், ஒசூரில் 36 பேர், சிங்காரப்பேட்டையில் 8 பேர், மத்தூரில் 25 பேர், என மொத்தம் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 225பேர் கைது செய்யப்பட்டனர்.
சூளகிரியில்...
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த திமுகவினர் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்பட முடியவில்லை.
இந்த சாலை மறியலுக்கு வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ. முருகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் வெங்கடேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஊத்தங்கரை ஒன்றியச் செயலர்கள் வடக்கு எக்கூர் செல்வம், தெற்கு சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாலதி நாராயனசாமி, நகரச் செயலர் பாபு சிவக்குமார், சிறுபான்மையினர் பிரிவு அமானுல்லா, மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் குமரேசன் மற்றும் திமுக கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை ஊத்தங்கரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments