தீரும் குடிநீா் பிரச்னை? ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 600 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீா் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து சரிந்து விநாடிக்கு 150 கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 600 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
கபினி அணையில் தண்ணீா் திறப்பு: கேரள மாநிலம், வயநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியில் 83 கனஅடி வரை நீா்மட்டம் உயா்ந்து அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மேலும் நீா்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். மேலும், கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தமிழக எல்லையை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.