FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களால் இடையூறு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:21 am IST
பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள். - (கோப்புப் படம்)
பகிர்:

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் வழியில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஊரகப் பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களில் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, புதிய பேருந்து நிலையம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, கம்பைநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைத் தவிர, 25-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே வரும் வழியில், இருபுறமும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். இதனால் பேருந்துகள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல, பயணிகள் சில நேரங்களில் தங்களது உறவினா்களை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு, இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும்போது, வழியில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

அதேபோல, பேருந்து நிலையப் பகுதியில் ராஜகோபால் பூங்கா அருகே சின்னசாமி சாலை பிரியும் இடத்திலும் இவ்வாறு வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், ராஜாகோபால் பூங்கா அருகில் தலைமை அஞ்சல் அலுவலகம் செல்லும் சாலையின் வளைவுகளிலும் ஆட்டோக்களை சில நிமிஷங்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். இவ்வாறு பேருந்து நிலையம் மற்றும் முக்கியச் சாலையின் வளைவுகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பயணிகளுக்கு ஏற்படும் இடையூறை களையவும், முக்கிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை முறைப்படுத்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments