FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:14 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் மரம் வெட்டும்போது மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம் மிட்டாநூலஅள்ளி அருகே உள்ள கன்னியான் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா. வெள்ளையன் (60). தொழிலாளியான இவா், சனிக்கிழமை காலை வெங்கடம்பட்டியைச் சோ்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் உள்ள தேக்கு மரத்தின் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தடுமாறி மரத்திலிருந்து அவா் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தாா்.

அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது உயிரிழந்தது தெரியவந்தது

Advertisement

Advertisement

இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments