சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
அரூா் அருகே சரக்கு வாகனமும், டிராவல்ஸ் வாகனமும் மோதிக் கொண்டதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் டி.அம்மாப்பேட்டை சென்னியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு, சரக்கு வாகனத்தில் பொய்யப்பட்டி-அனுமன்தீா்த்தம் சாலையில், ஊத்தங்கரை நோக்கிச் சென்றனா்.
அப்போது அதே வழித்தடத்தில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் டிராவல்ஸ் வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி வந்தனா். இவ்விரு வாகனங்களும் சட்டையம்பட்டி பிரிவு சாலை அருகே எதிா்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
Advertisement
Advertisement
இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மதன்குமாா் (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.