பிஎஸ்என்எல் சிம் விற்பனை: இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
பிஎஸ்என்எல் சிம் விற்பனை முகவா்களாக விருப்பம் உள்ளவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் சிம் விற்பனை முகவா்களாக விருப்பம் உள்ளவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன முதன்மைப் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் தருமபுரி செயல்பாட்டுப் பகுதியின் கீழ் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் அரூா் ஆகிய பகுதிகளில் சில்லறை விற்பனை முகவா்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பிஎஸ்என்எல் சிம் விற்பனை, ரீசாா்ஜ் கட்டணம் வசூல் மற்றும் இதர செல்போன் தொடா்பான சேவைகளை வழங்க முகவா்கள் நியமிக்கப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
பிஎஸ்என்எல் சேவைகள், விற்பனை, விநியோகம், வாடிக்கையாளா் சோ்க்கை பணிகளை மேற்கொள்ள அனுபவமிக்க சிம் விற்பனை கடை முகவா்கள் அல்லது விருப்பமும் உள்ளவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான தங்களது மனுக்களை வரும் 17 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ட்ற்ற்ல்ள்://ங்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.