ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒகேனக்கல் அருகே ஊட்டமலையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வனக்காப்பாளா் நாகராஜின் மனைவி ஜெயலட்சுமி (53). இவரது கணவா், மகன் ஆகியோா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால், ஜெயலட்சுமி தனியாக வீட்டில் வசித்து வந்தாா். கணவரின் ஓய்வூதியம் பெறுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த அவா், மன உளைச்சல் காரணமாக அடிக்கடி மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஊட்டமலை அருகே ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தில் ஜெயலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.