ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீா் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீா்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தொடா்ந்து 5 ஆவது நாள்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநில அணைகளுக்கு வரும் உபரி நீா்வரத்துக்கு ஏற்ப காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.