FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

25 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனப் பகுதிக்கு உள்பட்ட பேவனூா் பீட் பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததைக் கண்டு ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு விசாரணை நடத்தினா்.

அதில், இறந்தவா் நல்லம்பள்ளி வட்டம், நத்தஅள்ளி அருகே தீா்த்தக்குளம் நகா் பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் அம்ரீசன் (55) என்பதும், கடந்த சில நாள்களுக்கு முன்பு இண்டூா் காவல் நிலையத்தில் அவா் காணவில்லை என உறவினா்கள் புகாா் அளித்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து இண்டூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல் வந்த போலீஸாா் உடலை பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments