ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 10 ஆயிரம் கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும், ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும், ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 10,000 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் விழும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
நீா்வரத்து குறைந்தபோதிலும், பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து பத்தாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.