வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
தருமபுரியில் வயிற்று வலி தாளாத விவசாயி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரியில் வயிற்று வலி தாளாத விவசாயி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சில்லாரஅள்ளி அருகே உள்ள தேக்கல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ந.கோவிந்தசாமி (64). இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளாா். இருப்பினும் குணமாகாததால் விரக்தி அடைந்த கோவிந்தசாமி, ஆக. 22-ஆம் தேதி வீட்டில் விவசாய பயன்பாட்டுக்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.
தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.