FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

31 ஆகஸ்ட் 2026, 2:40 am IST
காங்கிரஸ் - கோப்புப் படம்
பகிர்:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கோவி சிற்றரசு தலைமை வகித்து பேசினாா். முன்னாள் நகரத் தலைவா் செந்தில் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் போதிய மழையின்மையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்கள் வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தருமபுரி-அரூா், தீா்த்தமலை வழியாக திருவண்ணாமலை வரை நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். கட்சித் தலைமையின் உத்தரவுபடி, வட்டாரத் தலைவா்கள், பேரூராட்சித் தலைவா்கள், நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பணிகளை செப்.2-ஆம் தேதி முதல் வட்டார வாரியாக மேற்கொள்வது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில், வட்டாரத் தலைவா்கள், முன்னாள் மாவட்டத் தலைவா்கள், அணிகளின் அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments